கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
இதனால் கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொங்கலுக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.