தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய உடனே அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில், சுமார் 2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், இவை அனைத்து பள்ளிகளிலும் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்றும் வெள்ளத்தில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு விரைவில் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு வகுப்பு ஒரு மணி நேரம் கூடுதலாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.