fbpx

ஜூன் 6இல் பள்ளிகள் திறப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!

பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது; “முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கிறோம்.

அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கூரைகளில் குப்பை இல்லாததையும் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Read More : உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா..? அதை எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பது தெரியுமா..?

English Summary

School Education Minister Anbil Mahesh has directed that the school classroom, teacher’s room and head teacher’s room should be cleaned and rain water channels should be kept clean.

Chella

Next Post

மயோனைஸ் சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Mon May 27 , 2024
70 people admitted to hospital after eating mayonnaise in kerala

You May Like