fbpx

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு..!! எங்கு தெரியுமா..?

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அசாம் மாநிலத்தில் டாக்டர் பனிகாந்தா ககாதி விருது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உயர்கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வழங்கப்படுகிறது.

அதேபோல், 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்படுகிறது. அந்தவகையில், 35,775 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 30ஆம் தேதியன்று ஸ்கூட்டர்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதில் 5,566 பேர் மாணவர்கள், 30,209 பேர் மாணவிகள் ஆவர். இதேபோல் பத்தாம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 நவம்பர் 29ஆம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

strike: நவம்பர் 6ஆம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்..!

Thu Nov 2 , 2023
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகளை நவம்பர் 6ஆம் தேதி முதல் வெளி நுரைத்தும என அறிவிப்பு. இதுதொடர்பாக மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 40 சதவீத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் லாரிகளை பார்க்கிங் செய்வதற்கான டெர்மினல் அமைத்து கொடுக்க வேண்டும், ஆன்லைன் முறையில் […]

You May Like