fbpx

செம ட்விஸ்ட்..!! BJP கூட்டணியில் இன்று இணையும் பாமக..!! அதிர்ச்சியில் எடப்பாடி..!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சியுடனான பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கியுள்ளது. விரைவில் எந்த எந்த தொகுதி என இறுதி செய்யப்படவுள்ளது.

அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக தனது கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனி அணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, பாரி வேந்தர், சரத்குமார், தேவநாதன் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாமகவானது அதிமுக மற்றும் பாஜகவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. மாநிலங்களவை பதவி, மத்திய அமைச்சர் பதவி என கோரிக்கையை கூறியிருந்தது. இதில் ஒரு கட்டம் வரை அதிமுக தரப்பு பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு பாமகவின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது.

இதையடுத்து, பாமகவின் கோரிக்கைகள் நிறைவேற்றி தர பாஜக தரப்பு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் 7 தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி இன்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : TNPSC குரூப் 4 தேர்வு..!! 6,244 காலிப்பணியிடங்கள்..!! 20,37,094 பேர் விண்ணப்பம்..!!

Chella

Next Post

Oscars 2024: விருது வழங்க நிர்வாணமாக சென்ற ஜான் சினா!... வைரலாகும் வீடியோ!

Mon Mar 11 , 2024
Oscars 2024: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடைக்கான விருதை பிரபல மல்யுத்த வீரரான ஜான் சினா ஆடையின்றி நிர்வாணமாக வந்து அறிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஆஸ்கர் கருதப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் நிகழ்ச்சியை […]

You May Like