fbpx

பெரும் சோகம்…! மூத்த அரசியல்வாதி காலமானார்…! பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்…!

மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார்.

பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரிபாதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

அலகாபாத்தில் நவம்பர் 10, 1934 இல் பிறந்த கேசரி நாத் திரிபாதி, பீகார், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக குறுகிய காலத்திற்கு கூடுதல் பொறுப்பைக் கொண்டிருந்தார். உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஆறு முறை உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். அவர் 1977 முதல் 1979 வரை ஜனதா கட்சி ஆட்சியின் போது உ.பி.யில் நிதி அமைச்சராக இருந்தார். இவரது மறைவிற்கு உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

120-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த போலி சாமியார்.‌..! குற்றவாளி என தீர்ப்பு...!

Mon Jan 9 , 2023
120-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோக்களை தயாரித்த அமர்புரி என்கிற ஜலேபி பாபா குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் தோஹானாவில் உள்ள பாபா பாலக்நாத் கோவிலின் பூசாரி ஜலேபி பாபா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய சோதனையில் அவர் எடுத்த பல ஆபாச வீடியோக்கள் சிக்கியது. காவல்துறை […]

You May Like