fbpx

சட்டவிரோத பண பரவர்த்தனை…..! 3வது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை…..!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செந்தில் பாலாஜியை அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 9 மணி நேரம் வரையில் மட்டுமே விசாரிப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், விசாரணை அறைக்கு வெளியே, மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜியிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2 தினங்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், மூன்றாவது நாளாக செந்தில்பாலாஜியிடம் இன்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஓய்வு வழங்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன், செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவியின் வங்கி கணக்கு ஆவணங்களை வைத்து, அமலாக்கத்துறை தீவிர விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Next Post

சந்திரயான் - 3..!! என்ஜின்களே வேலை செய்யாவிட்டாலும் தரையிறங்கும்..!! எப்படி தெரியுமா..? இஸ்ரோ விளக்கம்..!!

Wed Aug 9 , 2023
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் […]

You May Like