தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் தொடங்கிய இந்த சோதனை கேரளா ஹைதராபாத் பெங்களூர் என்று செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, கரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது டாஸ்மாக் மூலமாக பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வருமான வரித்துறை சோதனைக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் அமைச்சரின் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் திமுகவின் தொண்டர் ஒருவரை வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.