fbpx

சீரியல் கில்லர் கேள்விப்பட்டிருப்பீங்க!! சீரியல் கிஸ்ஸர் பாத்திருக்கீங்களா???? எகிறிகுதித்து பெண்ணுக்கு முத்தம் தந்த மர்ம நபர்!

தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது.

ஜமுய் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவருக்கு தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதுவும் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண்மணி மருத்துவமனை வளாகத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து வந்த ஒரு நபர் அந்தப் பெண்மணி எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை அந்த சீரியல் கிஸ்ஸரை தேடி வருகிறது. மேலும் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனையின் பாதுகாப்புகளை அதிகரிக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Rupa

Next Post

#Ind vs Aus: தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!! ட்ராவில் முடிந்த 4-வது டெஸ்ட்..!!

Mon Mar 13 , 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில், கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை […]

You May Like