fbpx

அதிர்ச்சி..! தினசரி 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு..! வெளியான புள்ளி விவரம்..!

கடந்த ஆண்டு மட்டும் தினசரி 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில், அதிகளவாக ராஜஸ்தானில் 637 கற்பழிப்பு வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 2,947 வழக்குகளும், மராட்டியத்தில் 2,496 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 2,845 வழக்குகளும், டெல்லியில் 1,250 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதிர்ச்சி..! தினசரி 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு..! வெளியான புள்ளி விவரம்..!

அதேபோல பெண்களுக்கு எதிரான 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிக அளவில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் கற்பழிப்பு, கற்பழிப்பு கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாய திருமணம், ஆள்கடத்தல் போன்றவை அடங்கும். மேலும், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 52,947 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5% அதிகமாகும். இவற்றில் 70 சதவிகித இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன் அதிகமாக பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Thu Sep 1 , 2022
உங்கள் ஃபோன், லேப்டாப் அல்லது உங்கள் கண்பார்வையை பாதிக்கக்கூடிய வேறு எந்த கேஜெட்டிலும் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற கேஜெட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது ஒரு புதிய ஆய்வு, இது வயதாகும் செயல்முறையையும் பாதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. Frontiers in Aging இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட […]

You May Like