Boat accident: வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலியாகினர். 100 பேர் மாயமானதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.
வடக்கு நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜருக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு நைஜர் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், உள்ளூர் டைவிங் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோகி மாநில அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா மூசாவின் கூற்றுப்படி, சம்பவம் நடந்து சுமார் 12 மணிநேரம் ஆகியும் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று கூறினார். மேலும் இந்த விபத்தில் காணாமல் போனவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்று கூறப்படுகிறது. மேலும் படகு மூழ்கியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உள்ளூர் ஊடகங்கள் படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். நைஜீரியாவின் தொலைதூர பகுதிகளில் படகுகளில் கூட்டம் அதிகமாக உள்ளது, அங்கு நல்ல சாலைகள் இல்லாததால் பலருக்கு மாற்று வழிகள் இல்லை என்பதால படகு சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆபிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில், நீர் போக்குவரத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் போராடி வரும் நிலையில், இத்தகைய அபாயகரமான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: சிங்கப்பெண்ணே!. ஒருமணி நேரத்தில் 1,500 புஷ்-அப்!. கின்னஸ் சாதனை படைத்த 59 வயது மூதாட்டி!