fbpx

அதிர்ச்சி!. அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள்!. பொங்கி எழுந்த ஜி.வி.பிரகாஷ்!

G.V.Prakash: திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் வீடியோ வைராகிய நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. காலை, மாலை என 2 ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் சுமார் 8 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பெண்கள் மட்டுமே 4,500 பேர் படிப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்று, பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகிறது. மேலும், கழிப்பறையைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடப்பதால், மாணவிகள் கழிப்பறைக்கு மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாகவும், இதனால் சில மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறை அருகே உள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதால், கல்லூரி மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். அதனை கல்லூரி மாணவி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் “இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால், யாரும் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம்” என எழுதி, கழிப்பறை சுவற்றில் ஒட்டியுள்ளனர். தற்போது கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனடியாக இந்த கழிப்பறையைச் சுற்றி மண்டிக் கிடக்கும் முட்புதர்களையும், கழிப்பறையையும் சுத்தம் செய்து, சுகாதாரமான கழிப்பறையாக உருவாக்க வேண்டும் என்பதே அக்கல்லூரி மாணவிகளின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கடமையைச் செய்யாதவர்களை “பெண்கள் கல்வி” எரிக்கட்டும்…!!” என்று பதிவிட்டுள்ளார்.

Readmore: குரங்கு, பைத்தியம் என கிண்டல் செய்த கிராம மக்கள்!. பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த வீராங்கனை!

English Summary

Snake Infestation in Tamil Nadu College: Viral Video Shows Snakes Breeding Inside Women’s Toilet Commode at Arignar Anna College in Thiruvannamalai, GV Prakash Kumar Reacts

Kokila

Next Post

தேவையில்லாத மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?. முக்கியமான ஈமெயில்களை சேமிக்க இதோ புதிய ட்ரிக்!

Thu Sep 5 , 2024
Gmail Tips: How to delete useless mails in bulk on Gmail, this trick is great for saving important emails..

You May Like