Indian soldiers kidnapped: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் இருவரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு படையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு TA வீரர்களை (சிப்பாய்கள்) வனப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் கடத்திச்சென்றதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்ட இரண்டு வீரர்களில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் தப்பி வந்துள்ளதாகவும், மற்றொருவர் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அனந்த்நாக் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Readmore: 30ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி!. குறைந்துவரும் நதிகளின் நீர்மட்டம்!. ஐநா அதிர்ச்சி!.