fbpx

ஷாக்.. வரலாறு காணாத விலை உயர்வு.. முதன்முறையாக ரூ.45,000ஐ தாண்டிய தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,690க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.45,520க்கு விற்பனையாகிறது.. இதன் மூலம் முதல்முறையாக தங்கம் விலை ரூ.45,000-ஐ கடந்துள்ளது..

இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

தமிழ்நாட்டில் இனி முகக்கவசம் கட்டாயம்..!! அலட்சியமா இருக்காதீங்க..!! அமைச்சர் கொடுத்த வார்னிங்..!!

Wed Apr 5 , 2023
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், […]

You May Like