fbpx

அதிர்ச்சி..!! ஹெலிகாப்டர் விபத்து..!! இந்திய கடற்படை அதிகாரி உயிரிழப்பு..!!

கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவின் ஓடுபாதையில் சேடக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கடற்படை வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சி விமானத்தில் இருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர், லிப்ட்-ஆஃப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடுபாதையில் இருந்த கடற்படை அதிகாரி ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடுகளில் அடிபட்டு இறந்தார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இது தொடர்பான இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

கொச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுபாதையில் இந்த விபத்து நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பைலட் உட்பட இருவர் காயம் அடைந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கடற்படை தலைமையகத்தில் உள்ள சஞ்சீவனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவர் இவர்கள்தான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sat Nov 4 , 2023
பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் நபரல்லாது இன்னொருவர் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியெற்றப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் […]

You May Like