fbpx

அதிர்ச்சி..!! மொத்த வாக்குகள் 289, பதிவானது 329..! உள்ளாட்சி இடைத்தேர்தலில் குளறுபடி..?

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3-வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் பூத் ஏஜெண்டுகள் 289 வாக்குகள் பதிவானதாக தெரிவித்தனர். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 329 வாக்குகள் பதிவானதாக கூறினார். இதனால், அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 வாக்குகள் கூடுதலாக எப்படி பதிவானது என தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

image

மேலும், வாக்குகள் பதிவான எந்திரங்களை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதுகுறித்து புகார் அளித்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.

Chella

Next Post

அதிபரின் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துப் பார்த்த சாமானியர்கள்..! வீடியோக்கள் உள்ளே..!

Sun Jul 10 , 2022
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வசித்து வரும் மாளிகையின் சொகுசு வாழ்க்கையை போராட்டக்காரர்களும் வாழ்ந்து பார்த்தனர். இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள் போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட அனைத்து அறைகளிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்று (ஜூலை 10) வரையிலும் அங்கேயே உள்ளனர். முதன் முறையாக […]
அதிபரின் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துப் பார்த்த சாமானியர்கள்..! வீடியோக்கள் உள்ளே..!

You May Like