cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.7.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817க்கு விற்பனையாகிறது. சென்னையில் நேற்றுவரை ரூ.1,809 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்றுமுதல் ரூ.1,817க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக உள்ளது.
Readmore: எனக்கு இந்த பவுலர் தான் பிடிக்கும்!. என்னைவிட அவருக்கு தான் மவுசு அதிகம்!. தல தோனி ஓபன் டாக்!.