தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதுமட்டுமின்றி மத்திய – மாநில அரசுகளின் நிவாரண உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல், கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் துவரை அறுவடை துவங்கியுள்ளதால், புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த நிலையில், கனடா பருப்பை வாங்குவது ஏன்?. இதனால், அரசிற்கு, ரூ.60 கோடி இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், ரேஷனில் பருப்பு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.