fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..? இனி முழு பொறுப்பு பிரேமலதா வசம்..!!

ஸ்டைலால் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பால் கமலும் தமிழ்த்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பான நடிப்பாலும் பேச்சாலும், சமூகக் கருத்துகளாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் விஜயகாந்த். நுழைந்த சில வருடங்களிலேயே வெளிப்படையானவர், வெள்ளந்தி மனிதர், உதவும் குணம் உடையவர் என மற்ற நடிகர்களிடமிருந்து தனித்த அடையாளமானார் விஜயகாந்த்.

நடிக்க ஆரம்பித்த வெகு சில காலத்திலேயே அவரின் நெருங்கிய நண்பர்களால் அவர் பெயரில், ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இலவச தையல் மெஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் கொடுப்பது, இலவசத் திருமணங்கள் நடத்தி வைப்பது, ஆண்டுதோறும் தன் சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென 25 லட்ச ரூபாய் ஒதுக்குவது எனத் தனி சேவை சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார்.

அரசியல் நோக்கத்தோடு இவை எல்லாவற்றையும் செய்யாவிட்டாலும்கூட, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்து இவற்றை எல்லாம் ஏன் செய்யக்கூடாது என நினைக்கத் தொடங்கினார் விஜயகாந்த். அதற்குக் காரணமாய் அமைந்தது தன் மன்ற நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளும் ஆளும் அரசின் காவல்துறையும் கொடுத்த நெருக்கடிகள்தான் என தன் அரசியல் வருகைக்கு அறிமுகமும் தந்தார் நடிகர் விஜயகாந்த். 2000ஆம் ஆண்டிலேயே, தன் மன்றத்துக்கென, தனிக்கொடியை உருவாக்கினார் விஜயகாந்த்.

ஆனால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் பங்கேற்பதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் வரவுள்ளதால், தேமுதிமுகவை வலுப்படுத்தும் பணியில் அவரது மனைவி பிரேமலதா ஈடுபட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால், அடுத்தக்கட்ட தலைவரை தேர்ந்தெடுக்க விரைவில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் கட்சி தொடர்பாக முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரத்துடன் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியும், மகன் விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

’ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டிய பதவி’..!! ’அடங்கி செயல்படுங்கள்’..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Sat Nov 18 , 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம். தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், […]

You May Like