நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் பாலியல் கொலை, மகாராஷ்டிர மாநிலத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை என தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
மேலும், கேரளாவில் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. நடிகைகள் தங்களை யாரெல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள் என்பது குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதனால், சினிமா திரையுலகமே அதிர்ந்துபோய் உள்ளன. இந்நிலையில், தான் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-22க்கு இடைப்பட்ட 6 ஆண்டுகளில் 1,551 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 280, மத்தியப்பிரதேசத்தில் 207, அசாமில் 205, மகாராஷ்டிராவில் 155, கர்நாடகாவில் 79 வழக்குகள் பதிவானதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
Read More : ’நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர்’..!! புது குண்டை தூக்கிப் போட்ட சேரன் பட நடிகை..!!