அசாமின் கவுகாத்தியில் உள்ள கோவில் வளாகத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ச்சுக் பகுதியில் நடந்த சம்பவத்தின் வீடியோ, உள்ளூர் மக்களிடையே வைரலானதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், 8-வது நபர் அடுத்த நாள் கைதானார். குவாஹாட்டி போலீஸ் கமிஷனர் திகந்தா பராஹ் கூறுகையில், ”வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு செய்தியாளரிடமிருந்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவை ஆய்வு செய்து கோர்ச்சுக் மற்றும் ஜலுக்பாரி காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் குழுக்கள் உடனடியாக சோதனைகளை நடத்தி, வீடியோவில் அடையாளம் காணப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும், ”கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என்று தெரிவித்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில், நவம்பர் 17ஆம் தேதி ராஸ் பண்டிகை அப்பகுதியில் கொண்டாடப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. எங்களுக்கு இதுவரை கிடைத்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அந்த பெண்ணை மலைப்பாங்கான பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த சம்பவத்தை அவர்களால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அந்த வீடியோவில் இருந்து ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அந்தி சாயும் பொழுது போதைக்கு அடிமையானவர்கள் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Read More : தவெகவினருக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்..!! இனி யாரும் இதை பண்ணக் கூடாது..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!