பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாடகி உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பீகார் கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய் பிடிஐ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது கிரிமினல் குற்றம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பாடகி உபாத்யா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அவரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.