fbpx

சூப்பர் வாய்ப்பு…! TNUSRB-க்கு மொத்தம் 621 பணியிடங்கள்…! தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!

காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியத்தால்‌ பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு காவல்துறையில்‌ உள்ள சார்பு ஆய்வாளர்‌ பணிக்கு 621 காலி பணியிடங்களுக்கான (ஆண்‌, பெண்‌, திருநங்கைகள்‌) அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்‌ தமிழ்நாடு காவல்‌ சார்நிலைப்‌ பணி 571 காலிப்பணியிடமும்‌, தமிழ்நாடு சிறப்பு காவல்‌ சார்நிலைப்‌ பணி – 110 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம்‌ வாயிலாக 01.06.2023 முதல்‌ 30.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பத்தாரர்கள்‌ 01.07‌.2023 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும்‌ 30 வயதிற்கு மேற்படாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இத்தேர்விற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது, ஆதிதிராவிடருக்கு 35 வயது, திருநங்கைகளுக்கு 35 வயது ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது, முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ 20% காவல்துறை ஒதுக்கீட்டில்‌ தேர்வில்‌ பங்கேற்கும்‌ விண்ணப்பதாரர்களுக்கு 47 வயதும்‌ உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கிறீர்களா?... அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?... ஆபத்து!

Wed May 10 , 2023
நீண்ட நேரம் பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அழிந்துவிடும் என்றும் இதனை குடிப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். […]
ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

You May Like