fbpx

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..! சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சயானா கவாகாமியை 21-15,21-7 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோற்கடித்தார். சிங்கப்பூர் ஓபன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெறுகிறார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..! சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!

அதேபோல், இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அர்ஜும் மொட்கில், ஐஎஸ்எஸ்எஃப் உலகப் கோப்பையின் 50 மீ பெண்கள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 402.9 புள்ளிகளுடன் அன்ஜும் முன்றாம் இடத்தை பிடித்தார். சனிக்கிழமையன்று நடைபெற்ற ராங்கிங் சுற்றில் 6-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தேர்வானார் அர்ஜும். இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அனா யாங்சென் தங்கப் பதக்கமும், இத்தாலியைச் சேர்ந்த பார்பரா கம்ப்ரோ வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

Chella

Next Post

காவல் நிலையத்திற்கு தலையுடன் நடந்து சென்றவரை.. பார்த்து பீதியில் உறைந்த மக்கள்...!

Sun Jul 17 , 2022
ஓடிசா மாநிலத்தில் தேன் கடல் மாவட்டம் சந்திரசேகர்பூர். இப்பகுதியில் குடியிருப்பவர், நாக பேடி மாஜி.   இவரது மனைவி சஞ்சலா. இவர்கள் இருவருக்கும் கல்யானமாகி 25 வருடத்திற்கு‌ மேலாகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சஞ்சலா வேறொரு ஆணுடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளார் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நாக பேடி அடிக்கடி அவரிடம் இது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like