fbpx

பாடகி பவதாரிணி மரணம்..!! கடைசி நேரத்தில் தெரியவந்த உண்மையான பாதிப்பு..!!

இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், கடைசி காலத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி காலமானார்.

பாடகி பவதாரிணிக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு பித்தப்பை சிகிச்சை வழங்கப்பட்டதோடு, அவரது பித்தப்பையில் இருந்து கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், துரதிஷ்டமான விஷயம் என்னவென்றால் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் 4-வது நிலையில் இருந்துள்ளது.

பொதுவாக 1ஆம் நிலை புற்று நோய்களை எளிதாக சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடமுடியும், 3-வது நிலையை தாண்டிவிட்டால், தான் புற்று நோயாளியை குணப்படுத்துவது மிகவும் கடினம். இதில் அவருக்கு 4-வது நிலை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் அதுவே அவரது மரணத்திற்கு மிகப்பெரிய காரணமாக மாறிவிட்டது. பவதாரிணியின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

காய்ச்சல் பாதிப்பு..!! மருத்துவர் ஆலோசனையின்றி வீட்டில் சிகிச்சையா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!

Fri Jan 26 , 2024
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தையும், எச்பிசிஎல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

You May Like