தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலின் அற்புதமான வரலாறும், அதிசயங்களும், மர்மங்களும் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
தல வரலாறு: பழங்காலத்தில் இந்த பகுதிக்கு அள நாடு என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம். ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தார் என நம்பப்படுகிறது.
பணியாளரிர் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும், மண்ணுக்கும் வளரத் தொடங்கியது. சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான்.
உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார். மனனன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இவ்வாறு மிகவும் பிரசித்திபெற்று விளங்கும்.
சிவன் சிலையின் உயரம் மாறும் அதிசயம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் கோவிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவ பெருமான் காட்சி தருகின்றார். அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.
வியர்வை வடியும் சிவகாமி அம்மன்: இந்த கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மனுக்கு அர்ச்சகர் எத்தனை முறை அலங்காரம் செய்தாலும் முகத்தில் மட்டும் வேர்வை வடிந்து கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.
சிலையில் வெட்டுக்காயம்: இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கத்தின் சிலை வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கூறப்பட்டு வருவது, மன்னன் ஆலிங்கனம் சிவனுடன் சண்டை செய்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் நினைவாகவே வெட்டு காயத்துடனும், மன்னனின் மார்பு கவச தடத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எலும்புகள் கல்லாக மாறும் அதிசயம்: இந்த ஊரில் உள்ள சுரபி நதி பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஆச்சரியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த நதியில் இறந்தவர்களின் எலும்புகள் விழுந்தால், அந்த எலும்புகள் நவீன கல்லாக மாறுவதாக கூறப்படுகிறது. இதனை அறியாதவர்கள் இதை ஒரு மர்மமாகவே கருதுகின்றனர்.
நாகலிங்கப்பூ: இந்த கோயிலில் உள்ள மரத்தில் நாகலிங்கப்பூ பூக்கும் போது, அதன் நடுவில் சிவலிங்கம் போன்ற அமைப்பின் காட்சி பெறப்படுகிறது. இந்த பூவும், அதனைச் சுற்றி நிற்கும் ஆதிசேஷன் போன்ற அமைப்பின் நடுவில் இந்த லிங்கம் இருப்பதை பக்தர்கள் மிகவும் பக்தி கொண்ட பார்வையில் ரசிக்கின்றனர். இது இந்த கோயிலின் மற்றொரு ஆச்சர்யமாக கருதப்படுகிறது.
சின்னமனூரில் உள்ள இந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், ஒரு சமூக ஆதரவு மட்டுமின்றி, அந்த பக்தர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு இடமாக உயர்ந்துள்ளது. இந்த கோயிலின் மர்மங்கள், அதன் வரலாறு, மற்றும் அற்புதமான அம்சங்கள், இந்த இடத்தை அதிகரிக்கும் வகையில் அனைவரையும் ஈர்க்கின்றன. இந்த கோயிலின் இன்றைய நிலை, அதன் மகிழ்ச்சி மற்றும் பக்தி பூர்வமான அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் முறையில் அர்த்தபூர்வமானது. இருப்பினும், இந்த கேள்விகளுக்கு நிரந்தரமான பதில் எப்போது கிடைக்கும் என்பது தெரியாது.
Read more: மொபைல் மூலம் யாராவது உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கிறார்களா..? எப்படி ஸ்டாப் செய்வது..?