கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது.
இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார்.
அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர் காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார்.
இது குறித்து போலீசார், சுஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை அறிக்கை வந்த பின் விஷம் கலந்திருக்கிறது என உறுதியானால், சுஜா கைது செய்யப்படுவார், என போலீசார் தெரிவித்துள்ளனர்.