தென்னிந்திய நடிகையான சௌமியா தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பகீரங்கமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த இயக்குநர் தனக்கு மனநலன் ரீதியாகவும், உடல்நலன் ரீதியாகவும் துன்புறுத்தியது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் வன்கொடுமையில் ஆழ்த்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த செளமியா, ”படத்தில் நடிக்கவைக்க பெரிய தொகையை இயக்குநர் சார்பில் என் தந்தையிடம் வழங்கப்பட்டதால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிப்புப் பயிற்சியில் பெருமளவு தொகை செலவிடப்பட்டதால், படத்திலிருந்து விலக முடியவில்லை. இயக்குநரும், அவரின் மனைவியும் தன்னை மிகவும் கனிவுடன் நடத்தினர். அவர்கள் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள். அங்கு உணவு, பழரசம் போன்றவை வழங்கி அவரின் மனைவி என்னை கவனித்துக்கொள்வார்.
ஒருநாள், அவரின் மனைவி வீட்டில் இல்லாதபோது இயக்குநர் என்னருகில் வந்து, மகளைப் போன்று எண்ணுவதாகக் குறிப்பிட்டு எனக்கு முத்தமிட்டார். மகளாக தன்னை நினைப்பதாகக் கூறியவர், என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். சொல்லமுடியாத பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டேன். என் மனநிலையை முழுவதுமாக சிதைத்துவிட்டார். அப்படம் முடியும் வரை பாலியல் அடிமை போன்று நடத்தப்பட்டதாகவே உணர்ந்தேன். இதிலிருந்து மீண்டுவர எனக்கு 30 ஆண்டுகள் கடந்துவிட்டது” என செளமியா குறிப்பிட்டார்.
பாதுகாப்பு கருதி பொதுவெளியில் இயக்குநரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளிக்கும்போது முழு விவரங்களை அளிக்கவுள்ளதாகவும் செளமியா தெரிவித்தார். மேலும், திரைத் துறையில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாக முன்வந்து தங்களின் அனுபவங்களைப் புகார்களாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் செளமியா கேட்டுக்கொண்டார்.
Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?