fbpx

தொடரும் அட்டூழியம்…! மீன்பிடிக்கச் சென்ற 7 தமிழர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை…!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்; ‘IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

இந்த நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. பாக்- ஜலசந்தி பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத்தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஆபத்தான டெங்கு காய்ச்சல்: இது தான் முக்கிய அறிகுறிகள்...! உயிருக்கே ஆபத்து வரும்...!

Sat Oct 29 , 2022
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோய் மற்றும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான நோயைப் பெறுவதற்கான ஆபத்து மிக அதிகம். டெங்கு காய்ச்சலால், இறப்பு, குறிப்பிடத்தக்க இரத்தப்போக்கு, இரத்த அழுத்தத்தில் கூர்மையான குறைவு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]
’மக்களே அடுத்த 3 மாதங்கள் உஷார்’..!! ’பருவகால காய்ச்சலுடன் இந்த காய்ச்சலும் அதிகரிக்குதாம்’..!!

You May Like