மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 8-ம் தேதி ஆகும்.
For More Info: ssc.nic.in