நாடு முழுவதும் இன்று முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை வாங்குவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் குறிப்பாக தயிர், லஸ்ஸி, மோர், பனீர், கோதுமை, அரிசி போன்றவற்றை முன்கூட்டியே பேக்கிங் செய்து லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு இன்று முதல் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த பொருட்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பேக்கிங் செய்யப்பட்டதால் இதற்கு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு உண்டு. காசோலைகளை வழங்குவதற்கு (cheques) வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதே போல மருத்துவமனையில் அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ITC இல்லாத அறைக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும் சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு மற்றும் பிறவற்றிற்கான பணி ஒப்பந்தம் 18% வரி விதிக்கப்படும். வரலாற்றுச் சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், குழாய்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.