இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெஸ்கிதான் (Uzbekistan) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் (Marion Biotech) என்ற நிறுவனம் தயாரித்த இருமல் மருந்ததான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாக ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரையின்றி அதாவது பெற்றோர்கள் அல்லது பார்மாசிஸ்டுகளின் அறிவுறுத்தலில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிலையான அளவை தாண்டி கொடுக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 18 குழந்தைகள் உயிரிழப்பை தொடர்ந்து டாக்-1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் அனைத்து பார்மசிக்களில் இருந்தும் திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும் உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.