fbpx

காதலனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு வேறொருவருடன் தொடர்பு..!! லீக்கான ஆபாசப் படம்..!! மாணவி விபரீத முடிவு..!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அக்கல்லூரியில் சுசித்ரா (22) என்ற மாணவி படித்து வந்துள்ளார். இவருக்கு, அதே கல்லூரியில் படித்து வரும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பானது காலப் போக்கில் காதலாக மாறியது. இதனால் சுசித்ரா அந்த மாணவருடன் நெருங்கி பழங்கி வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாணவி சுசித்ரா மாணவனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்துள்ளார். பலமுறை சுசித்ராவிடம் அந்த மாணவன் பேச முயன்றும், அவர் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுசித்ரா அதே கல்லூரியில் படித்து வரும் சீனியர் மாணவருடன் பேசி வந்துள்ளார். இது முன்னாள் காதலனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் சுசித்ராவை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவன் தன்னுடன் சுசித்ரா நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சக மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். இந்த விஷயம் மாணவி சுசித்ராவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலுககு ஆளானார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டில் மாணவி சுசித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான அலோக்யா, ராகுல், யஷ்வந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

”மக்களே இனி கொஞ்சம் கவனமா இருங்க”..!! நோய்கள் பரவும் அபாயம்..!! மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

Tue Feb 28 , 2023
வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட […]

You May Like