fbpx

90 கி.மீ வேகத்தில் புயல் காற்று…! கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் கீழே இறக்க வேண்டும்…! தமிழக அரசு உத்தரவு

ஃபெங்கல் புயல் காரணமாக கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே உறுதியாக நிலைநிறுத்த தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள், விளம்பர போர்டுகள் ஆகியவை சாய்ந்தும், விழுந்தும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றை கீழே இறக்கி வைக்க வேண்டும். அல்லது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; ஃபெங்கல் (FENGAL) புயல் இன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

English Summary

Storm winds at 90 kmph…! Cranes at construction sites must be lowered

Vignesh

Next Post

நடுக்கடலில் ரூ.3000 கோடி போதைபொருள் பறிமுதல்!. இந்தியா-இலங்கை கடற்படை அதிரடி!

Sat Nov 30 , 2024
Indian and Sri Lankan navies seize 500 kg Crystal Meth in Arabian Sea

You May Like