ஈர்ப்பு விசை அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் 23 மணிநேரம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள பாங்கூரைச் சேர்ந்த லிண்ட்சன் ஜான்சன் என்ற பெண் வசித்து வருகிறார்.. 28 வயதான அவர் ஒரு நாளைக்கு 10 முறை மயக்கமடைந்து விடுவாராம், மேலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் அவரால் எழுந்து நிற்க முடியாது. அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் Potsural Tachycardia syndrome நோய் இருப்பது கண்டறியப்பட்டது.. இது PoTS என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலை உட்கார்திருக்கும் போது அல்லது நிற்கும் போது இதயத் துடிப்பில் அசாதாரண அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இதை அவர் புவியீர்ப்பு விசை ஒவ்வாமை என்று குறிப்பிடுகிறார்..
இதுகுறித்து பேசிய அவர் “எனக்கு ஈர்ப்பு விசையில் ஒவ்வாமை உள்ளது.. இது முட்டாள் தனமாக தோன்றலாம்.. அது உண்மைதான். என்னா மூன்று நிமிடங்களுக்கு மேல் என்னால் எழுந்து நிற்க முடியாது. நான் படுத்திருந்தால் நன்றாக உணர்கிறேன். நான் நாள் முழுவதும் படுக்கையில் – ஒரு நாளைக்கு 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்..” என்று தெரிவித்தார்
2015 அக்டோபரில் வெளிநாட்டில் கடற்படையில் பணிபுரிந்தபோது லிண்ட்சிக்கு வயிற்று வலி மற்றும் முதுகுவலி ஏற்பட்டது. அவளுடைய அறிகுறிகள் படிப்படியாக மோசமடைந்தன, ஆனால் என்ன தவறு என்று மருத்துவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 2018 -ல், தனது நோய்களின் காரணமாக இராணுவத்திலிருந்து மருத்துவ ரீதியாக லிண்ட்சி விடுவிக்கப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு கடுமையான வயிற்று வலி வரத் தொடங்கியது.. ஆனால் என்ன தவறு என்று மருத்துவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் உங்கள் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஆக்ஸிஜனை அளவிடும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்.. அப்போது அவருக்கு PoTS நோய் இருப்பது உறுதியானது.. மருந்துகள் இருந்தபோதிலும், ஜான்சன் ஒரு நாளைக்கு மூன்று முறை மயக்கமடைகிறார்.. அவருக்கு உதவ அவரது கணவர் ஜேம்ஸை நம்பியுள்ளார். அவர் சாப்பிட அல்லது குளிக்க மட்டுமே எழுந்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.