fbpx

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீதே மாணவர்களுக்கு ஆர்வம்..! 40 அரசுப் பள்ளிகள் மூடல்..! RTI அதிர்ச்சித் தகவல்.!

தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) இது தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், ”தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பால் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறியதாகவும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய நிலையும் தமிழகத்தில் உள்ளதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீதே மாணவர்களுக்கு ஆர்வம்..! 40 அரசுப் பள்ளிகள் மூடல்..! RTI அதிர்ச்சித் தகவல்.!

அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், வரக்கூடிய ஆண்டுகளிலும் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீதே மாணவர்களுக்கு ஆர்வம்..! 40 அரசுப் பள்ளிகள் மூடல்..! RTI அதிர்ச்சித் தகவல்.!

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டுமென்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

’நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும்’..! கமல்ஹாசன் உருக்கம்

Wed Jul 20 , 2022
மிழ்நாடு அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுகிறேன். உயிர்க்கொல்லித் தேர்வான நீட் […]

You May Like