fbpx

மாணவர்களே உஷார்..!! இந்த பல்கலைக்கழகங்களில் யாரும் சேராதீங்க..!! மொத்தம் இருபதாம்..!!

இந்தியாவில் மொத்தம் 20 போலியான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாலர் மணிஷ் ஜோஷி கூறுகையில், ‘பல்கலைக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளாமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யுஜிசி-க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், குறிப்பாக அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுதவிர, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயர்கல்வி நிறுவனம் போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஹரியானா கலவரம் 2 மசூதிகள் மீது குண்டு வீச்சு…..! பதற்றம் அதிகரிப்பு காவல்துறை என்ன செய்கிறது……?

Thu Aug 3 , 2023
கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலத்தில் இருக்கின்ற நுஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் நடத்திய ஊர்வலத்தை ஒரு மர்ம கும்பல் தடுக்க முயற்சி செய்தது. இதனை தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்பு அந்த தகராறு வன்முறையாக மாறியது. ஆகவே அந்த மாவட்டத்திலும் மற்றும் அதற்கு அருகில் உள்ள பல்வால் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க முடியாமல் மத்திய, […]

You May Like