fbpx

மாணவர்களே..!! பள்ளிகள் திறந்தவுடன் வரப்போகும் அதிரடி மாற்றம்..!! இனி இதற்கெல்லாம் தடை..!!

தமிழ்நாட்டில் மார்ச் கடைசி வாரத்திலேயே கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஏப்ரல் 3-வது வாரம் வரை வேலை நாட்கள் நீண்டது. தேர்வு அட்டவணையில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட திருத்தம் மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் அளித்தது. ஒருவழியாக ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து விடுமுறை தொடங்கியது. தற்போதைய சூழலில் ஜூன் 5 அல்லது 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளிகள் திறப்புக்கு சாத்தியமில்லை.

இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சமீபகாலமாக மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள் கட்டத் தடை விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல், பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Read More : ரஜினியை Rolls-Royce காரில் அமரவைத்து அமீரகத்தை சுற்றிக்காட்டிய லு லு நிறுவன தலைவர்..!! வைரல் வீடியோ..!!

Chella

Next Post

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு...! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்...!

Wed May 22 , 2024
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like