அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகையின் 10ஆம் நாளான இன்றைய தினம் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும். இந்நாளில் பள்ளிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது வழக்கம்.
இந்நிலையில், விஜயதமி தினத்தையொட்டி அரசு தொடக்க பள்ளிகளுக்கு இன்று வேலை நாள் என்பதால், ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ஆம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பல தனியார் பள்ளிகள் அரை நாள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாளான இன்று மாணவர்களையும் பள்ளிக்கு வர சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.