fbpx

மாணவர்களே இன்றே கடைசி நாள்..!! ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அது மட்டுமின்றி ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள், அதாவது இன்றைக்குள் தங்களின் பெயர்களை அனுப்ப வேண்டும். டி. ரவிச்சந்திரன், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன கட்டடம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! பிப்.24ஆம் தேதி ரூ.2,000..!! மத்திய அரசு முக்கிய தகவல்..!!

Mon Feb 20 , 2023
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 13-வது […]

You May Like