fbpx

மாணவர்களே..!! நாளையே கடைசி..!! விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ளது. இந்நிலையில், 63% இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால், மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 3 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையே கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். ஜூலை 8ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அத்துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்ட கலந்தாய்வுகளில் 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால்..!! விசாரணையில் அதிர்ச்சி..!! சீல் வைத்த சிபிசிஐடி..!!

English Summary

The Director of College Education has announced that students can re-apply for admission to government arts and science colleges in Tamil Nadu.

Chella

Next Post

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் கொடைக்கானல், ஊட்டி!

Thu Jul 4 , 2024
Kodaikanal, Ooty will be upgraded as a corporation!

You May Like