சென்னை பறக்கும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் 5 மாணவர்கள் ஜன்னலில் கால் வைத்து ரயிலின் மேற்பகுதியை பிடித்துக் கொண்டு ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டனர். விபரீதத்தை உணராமல் மாணவர்கள் தலைகீழாக தொங்கி அட்டகாசம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் எத்தனையோ விபத்துக்கள் நேர்ந்துள்ளன. செல்பி மோகத்தால் பல மாணவர்கள் ரயில் முன்பு சாகசம் செய்கின்றனர். எத்தனையோ விபத்துக்கள் ஓடும் ரயிலில் நடக்கின்றது. ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு செயல்படுவது அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.