fbpx

’போதைப் பொருளை உபயோகித்துவிட்டு வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள்’..! – அன்புமணி ராமதாஸ் வேதனை

பள்ளி, கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகப் போதை பழக்கம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களில் கூட இந்த போதை பழக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் அதிகம் கிடைப்பதற்குக் காரணம், காவல்துறை அவர்களுக்கு உடந்தையாக இருப்பதுதான்.

’போதைப் பொருளை உபயோகித்துவிட்டு வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள்’..! - அன்புமணி ராமதாஸ் வேதனை

போதைப் பொருட்களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 30 சதவிகிதம் பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளிகளில் பாட இடைவெளியின் போது, கழிப்பறைகளில் மாணவர்கள் அதிகமான போதைப் பொருட்களை உபயோகித்து விட்டு வகுப்பறைக்குச் செல்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை, பெற்றோர்கள் விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தலாம். அப்போது தான் போதையிலிருந்து வெளிவரக்கூடும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அடித்துக் கொன்று ரோட்டில் வீசிய மனைவி..!

Mon Jul 4 , 2022
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (45). இவருக்கு கடந்த வருடம் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் முத்துராமலிங்கம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி, திருச்சுழி ரோட்டில் காரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில், முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக அங்குள்ள மக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் […]

You May Like