12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வரும் 14-ம் தேதி பகல் 12 மணி முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் நடைபெற்ற பொது தேர்வினை எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 14-ம் தேதி மதியம் 12 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தால் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இரண்டு நகல்கள் எடுத்து ஜூலை 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுக் கூட்டல் மற்றும் மறு மதிப்பிற்கான கட்டணத்தையும் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்.புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுக்கூட்டல் அறநிலையில் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Also Read: வைரஸ் தொற்றுக்கும் மூளை புற்றுநோய் தீவிரமடைவதற்கும் இடையே உள்ள தொடர்பு…! IIT புதிய கண்டுபிடிப்பு