fbpx

அதிகரிக்கும் திடீர் மரணங்கள்!… தாய்ப்பால் கொடுத்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்!… ஈரோட்டில் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையம்  மதன்குமார்  மனைவி பூரணி. இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை  பிறந்தது. குழந்தைக்கு, பூரணி தன் வீட்டில் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், அருகில் இருந்தவர்களின் உதவியுடன், கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மயங்கி விழுந்த பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பூரணியின் உடல் கோபி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kokila

Next Post

இதை செய்தால் போதும்... வெறும் ரூ.450க்கு சமையல் சிலிண்டர்கள் பெறலாம்...! எப்படி தெரியுமா...?

Wed Oct 11 , 2023
சமீபத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.603 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதிய ‘சிலிண்டர் ரீஃபில்லிங் திட்டத்தை’ அறிவித்துள்ளார், […]

You May Like