திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் குழுக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் காரணத்தால் திண்டுக்கலில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில், கட்சியின் பொருளாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு, சென்னையில் தங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைகள் மூலம், செரிமான கோளாறு காரணமாகவே இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.