இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்தில் இருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நவம்பர் 27ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சுற்றுலாப் பேருந்து ஒன்று மண்ணில் புதைந்தது. மேலும், பேருந்தின் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் விழுந்தன. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி மாயமான பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Read More : இன்னும் ஒரு சில மணி நேரங்களில்..!! உருவாகிறது ஃபெங்கல் புயல்..!! தமிழ்நாட்டில் அதி கனமழை எச்சரிக்கை..!!