தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் என்பவரின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வீட்டில் திடீரென சோதனை நடத்தப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.