கார் போன்ற வாகனங்கள் வெயில் காலங்களில் ஓடி கொண்டிருக்கும் போது தீ பிடித்து பற்றி எறிவது போன்ற நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பிஸியாகி இயங்கும் ஒரு சாலை, அதில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று மாலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் தற்போது வெயில் காலமும் கிடையாது, ஆனால் காரில் ஏற்பட்ட எதாவது பிரச்சனை காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.