fbpx

“ போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்.. அதை தடுத்தாக வேண்டும்..” முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதை பழக்கம் கொலை, கொள்ளை, பாலிய தொல்லை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைகின்றது.. போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும்.. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்..

போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. போதை பழக்கத்தால் பல்வேறு உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.. போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்.. பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்டிப்புடன், கணிப்புடன் இருக்க வேண்டும்.. பெற்றோர்கள் பாதி ஆசிரியராகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் குழந்தைகளை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபடமாட்டர்கள்..

போதையோடு கைகுலுக்க வேண்டாம்.. வாழ்க்கையே கை நழுவி போய்விடும்.. போதையின் பாதை அழிவு பாதை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்…. போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் பரவுவதை, விற்பனை செய்வதை, பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

பெண்களுக்கு நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.264 குறைந்த தங்கம் விலை...

Thu Aug 11 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880 விற்பனை செய்யப்படுகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
தங்கம்

You May Like